images

ரகசியம் காக்கும் கௌதம் மேனன்!

Dec 06, 2011
gautham-menon-ar-rahman-06-12-11

ஜீவா, சமந்தா, சந்தானம் நடிக்கும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'.  கெளதம் மேனன் இயக்கி வருகிறார். ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து R.S.Infotainment நிறுவனம் தயாரித்து வருகிறது.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது.

படத் துவக்கத்தின் போது வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றன.  'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கு புதிய இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறார் கெளதம் மேனன் என செய்திகள் வலம் வந்தன. பின்னர் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இப்போது, ரஹ்மான் மிகவும் பிஸியாக இருப்பதால் அவர் கௌதம் மேனன் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று பேச்சு நிலவி வருகிறது.

இந்நிலையில் கெளதம் மேனன் கூறியிருப்பது " 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை நான் எந்த ஒரு விளம்பரத்திலும் குறிப்பிடவில்லை.

நாயகன், நாயகி மற்றும் சில தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். இசையமைப்பாளர் குறித்து இதுவரை நான் சொல்லவில்லை.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சர்ப்ரைஸ் .  ஏ.ஆர்.ரஹ்மான் எனது படங்களில் இருந்து விலகிவிட்டார் என்று பரவி வரும் தகவலில் உண்மையில்லை " என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இசையமைப்பாளர் யார் என்ற ரகசியத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறார் கௌதம்.


Comments

Gallery

images

Parvathy Omanakuttan Imag

images

Yuvan Concert Poster

video

images

NEP Special Video

images

Kamal on Vishwaroopam

more videos

Review

Music Review

Your Ad Here
Your Ad Here

Scenes of the weeks